ஒன்ராரியோவில் அனைத்து தரப்பினரையும் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்காக கட்டாய ஊக்கப்படுத்தலை வழங்க வேண்டும் என்று விஞ்ஞான ஆய்வு நிபுணர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
அண்மைய நாட்களில் கண்டறியப்பட்டு வரும் தொகையானது தொடருமாக இருந்தால் நிலைமைகள் பாரதூரமாகலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தற்போதைய நிலையில் மூன்றாவது அலையை முகங்கொடுப்பதற்கு உள்ள ஒரேயொரு சாதகமான நிலைமை தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளலே என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
இந்தவியடத்திர் காணப்படும் தயக்கங்களை தவிர்த்து அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.