ஒன்ராறியோவில், வீடுகளில் தங்கியிருக்கும் உத்தரவை செயற்படுத்துவதில், இன்று தொடக்கம் புதிய அணுகுமுறையை கையாளப் போவதாக, மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோவில் உள்ள அனைத்து 16 காவல்துறை பிரிவுகளிலும், அர்ப்பணிப்புள்ள குழுக்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபடவுள்ளது.
இந்தக் காவல்துறைக் குழுக்கள், உள்ளக மற்றும் வெளியக ஒன்றுகூடல்களை தடுக்கும் நடவடிக்கைகளில் பிரதானமாக ஈடுபடும்.
மத்திய கட்டளைப் பணியகத்துடன், ஒருங்கிணைந்து , பிரிவு ரீதியாக இந்தக் குழுக்கள் செயற்படும் என்றும், தேவைப்பட்டால், அந்தந்த பிரிவு எல்லைகளை தாண்டிச் செயற்படவும் அதிகாரிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய காவல்துறைக் குழுக்கள் இன்று பிற்பகல் 5 மணி தொடக்கம் செயற்படவுள்ளதாகவும் ஒன்ராறியோ காவல்துறை தெரிவித்துள்ளது.