முக்கிய செய்திகள்

ஒன்ராரியோவில் இரண்டாவது நாளாகவும், இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள்

32

ஒன்ராரியோவில் இரண்டாவது நாளாகவும், இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை, 2 ஆயிரத்து 380 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை, 2 ஆயிரத்து 169 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த ஏழு நாட்களில் சராசரியாக, ஆயிரத்து 855 தொற்றாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களில் தொற்றாளர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளமை குறித்து மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தற்போது பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்படுபவர்களில், 3.8 வீதமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படும் நிலை காணப்படுவதாகவும், சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *