ஒன்ராரியோவில் நாளொன்றில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதோடு அதிக மரணங்களும் பதிவாகியுள்ளது.
மாகாண பொதுசுகாதார அதிகாரிகளின் கூற்றுக்களின் பிரகாரம் 3ஆயிரத்து 519பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
அத்துடன் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றல் சிகிச்சை பலனின்றி 89 உயிரிழப்புக்களும் சம்பவித்துள்ளன.
மேலும் மாகாணத்தில் இதுவரையில் 4ஆயிரத்து 856 மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் 21 மரணங்கள் 20முதல் 30வயதுக்கு உட்பட்வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.