ஒன்ராரியோவில் எதிர்வரும் ஜுன் 2ஆம் திகதி வரையில் வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் டக் போர்ட் அறிவித்துள்ளார்.
கோடைகாலத்தில் ஒன்ராரியர்களை பாதுகாக்கும் முகமாகவே இந்த தீர்மானத்தினை எடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில் அடுத்த இரண்டு மூன்று வாரங்களை முறையாக முகாமை செய்ய வேண்டிய தேவை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனால், இரண்டு வாரங்கள் மேலதிகமாக முடக்கல் நிலையை நீடித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கொரோனா தடுப்பூசிகள் விரைவாக விநியோக்கப்பட்ட வரும் நிலையில் விரைவில் வழமைக்கு திரும்பி விட முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.