ஒன்ராரியோவில் 2ஆயிரத்து 199 கொரோனா தொற்றாளர்கள் இன்றை நாளின் இதுவரையிலான காலப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, 30ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, மேலும் பல பரிசோதனைகளின் முடிவுகள் இன்னமும் வெளிப்படுத்தப்படாது பரிசோதனை கூடத்திலேயே தேங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
தொற்றுக் குறித்த பரிசோதனைகள் அதிகரித்துள்ள நிலையிலேயே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக மாகாண சுகாதாரத்துறை கூறுகின்றது.