ஒன்ராரியோ அடுக்குமாடி தீ விபத்தில் ஒருவர் பலி

103

ஒன்ராறியோவில், ஹமில்டன் அடுக்குமாடிக் குடியிருப்பில்  நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.25 மணியளவில் ஏற்பட்ட தீவிபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

326 Concession Street இல் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டடம் ஒன்றிலேயே தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

பெரும் புகைமூட்டத்துடன் எரிந்து கொண்டிருந்த கட்டடத்தில் இருந்து  இரண்டு பேரை தீயணைப்பு வீர்ர்கள் மீட்டுள்ளனர்.

அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டார் என்றும், இன்னொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *