முக்கிய செய்திகள்

ஒன்ராரியோ அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் வெளியிட்டுள்ள அச்சம்

36

ஒன்ராறியோவில் முதல்வர்  டக் போர்ட் அறிவித்துள்ள, முடக்க நிலை, கொரோனா தொற்றில் இருந்து தங்களை சிறிதளவும் பாதுகாக்காது, என்று சில அத்தியாவசிய சேவைப் பணியாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட முடக்க நிலையின்படி, தனிப்பட்ட பராமரிப்பு சேவைகள் மற்றும் உணவகங்கள் மாத்திரமே மூடப்படுகின்றன.

ஆனால், ஏனைய அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற வர்த்தகங்கள் வரையறுக்கப்பட்டளவில், செயற்படவும், பாடசாலைகளைத் திறந்திருக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பொது சுகாதார விதிகள், வாடிக்கையாளர்களை பெருமளவில் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் இருந்து விலகியிருக்கச் செய்வற்கு, போதிய ஊக்கம் அளிப்பதாக இல்லை என்று சில சில்லறை வணிக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலையில், அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்களில் இந்த மூன்றாவது நோய்த்தொற்றுக் காலத்தில் பணியாற்றுவது பாதுகாப்பானது என்று தாம் உணரவில்லை என்று, பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தாங்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியிருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *