ஒன்ராரியோ பிரதமர் டக்போர்ட்டுடன் நெருக்கமான தொடர்பில் இருந்த அதிகாரி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, டக்போர்ட் தன்னை சுய தனைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் குறித்த அதிகாரியுடன் இருந்த அனைத்து ஊழியர்களையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறும், கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறாயினும், தான் தனது கடமைகளில் பங்கேற்பேன் என்றும் டக்போர்ட் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.