ஒன்ராறியோவின் காட்டுத்தீ காரணமாக அங்கிருந்த 50க்கும் அதிகமான வீடுகளைச் சேர்ந்தோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்

429

ஒன்ராறியோவின் வடகிழக்கு பிராந்தியங்களில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ காரணமாக அங்கிருந்த 50க்கும் அதிகமான வீடுகளைச் சேர்ந்தோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

French River மாகாண பூங்காவுக்கு தெற்கே அமைந்துள்ள, கிலார்னி(Killarney) எனப்படும் துறைமுக பகுதியில் இருந்தே இவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சுமார் 19 சதுரக் கிலோமீட்டர் பரப்பிற்கு காட்டுத்தீ பரவியதை அடுத்து, நேற்று முன்தினம் முதல்கட்ட கட்டாய வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குறித்த அந்த ஆற்றின் மேற்கு மற்றும் வடக்கு பகுதிகளுக்கும் காட்டுத்தீ பரவிய நிலையில், நேற்றும் மேலதிக வெளியேற்ற உத்தரவுகளை அதிகாரிகள் பிறப்பித்துள்ளதாக ஒன்ராறியோ இயற்கை வளங்கள் மற்றும் வனவள அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *