ஒன்ராறியோவில் உள்ள வாகன தொழிற்சாலை ஊழியர்கள் இன்று Windsorஇல் போராட்டம்

287

General Motors நிறுவனத்தின் முதலீட்டாளர்கள் மாநாடு இன்று Windsorஇல் நடைபெறவுள்ள நிலையில், ஒன்ராறியோவின் அனைத்து பாகங்களிலும் உள்ள வாகன தொழிற்சாலை ஊழியர்கள் இன்று Windsorஇல் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.

Oshawaவில் உள்ள General Motors தொழிற்சாலையினை மூடுவதற்கு அந்த நிறுவனத்தின் தலைமை மேற்கெர்ணடுள்ள முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று முற்பகல் 11 மணியளவில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அந்த வகையில் இன்று இடம்பெறவுள்ள இந்த போராட்டத்திற்கு Kitchener, Brampton மற்றும் London உள்ளிட்ட ஏனைய அனைத்து நகரங்களில் இருந்தும் பணியாளர்களை அழைத்து வருவதற்கான பேரூந்து ஏற்பாடுகளை, General Motors நிறுவன பணியாளர்களை பிரதிநிதித்துபப்படுத்தும் தொழிற்சங்கம் மேற்கொண்டுள்ளது.

Oshawaவில் உள்ள General Motors தொழிற்சாலையினை மூடுவதான அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து ஏற்கனவே பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் இந்த வாரத்தின் தொடக்கத்திலும், Oshawaவில் உள்ள General Motors நிறுவன பணியாளர்கள் இரண்ட நாள் பணிப் புறக்கணிப்பு போராட்டத்தினையும் மேற்கொண்டிருந்தமை குறிபபிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *