முக்கிய செய்திகள்

ஒன்ராறியோ அமைச்சரவையிலும் இன்று மாற்றங்கள்

1237

கனேடிய மத்திய அமைச்சரவையில் சில முக்கிய மாற்றங்களை பிரதமர் ஜஸ்டின் ரூடோ அறிவித்துள்ள நிலையில், ஒன்ராறியோ மாகாண அரசின் அமைச்சரவையிலும் இன்று மாற்றங்கள் இடம்பெறவுள்ளன.

புதிதாக ஒரு அமைச்சர் நியமனமும் இடம்பெறவுள்ளதுடன், ஏற்கவே உள்ள சில அமைச்சுப் பதவிகளிலும் மாற்றங்களை முதல்வர் கத்தலின் வின் இன்று அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

ஒன்ராறியோவின் சமூக பாதுகாப்பு மற்றும் சீர்திருந்த அமைச்சராக இருந்த டேவிட் ஒறேசிட்டி(David Orazietti) கடந்த மாதம் பதவி விலகியுள்ள நிலையில், அவரின் அமைச்சுப் பெறுப்புகள் தற்காலிகமாக தொழிலாளர் துறை அமைச்சர் கெவின் ஃபிளைனிடம் (Kevin Flynn) ஒப்படைக்கப்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் குறித்த அந்த சீர்திருத்த அமைச்சு பொறுப்புக்கு புதிதாக ஒருவர் இன்று நியமிக்கப்படுவார் எனவும், அதனைவிட மேலும் சில அமைச்சுப் பொறுப்புகளிலும் மாற்றங்கள் அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் முழு அளவிலான அமைச்சரவை மாற்றங்கள் எவையும் இன்று இடம்பெறாது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை சீர்திருந்த அமைச்சராக இருந்து பதவி விலகிய டேவிட் ஒறேசிட்டியின் தேர்தல் தொகுதியான Sault Ste. Marie தொகுதியும் தற்போது ஒன்ராறியோ சட்டமன்றத்தில் வெற்றிடமாகியுள்ள நிலையில், அந்த தொகுதிக்கான இடைத் தேர்தல் அறிவிப்பினையும் முதல்வர் கத்தலின் வின் வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *