முக்கிய செய்திகள்

ஒன்ராறியோ ஏரியல் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

418

ஒன்ராறியோ ஏரியல் இருந்து ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Burlington பகுதிக்கு கிழக்கே, கரையில் இருந்து சுமார் 20 அடி தொலைவில் குறித்த அந்த சடலம் மிதந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த பகுதியில் வசிப்பவர் ஒருவர் அதனைக் கண்டு நேற்று மாலை ஆறு மணியளவில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த அதிகாரிகள் குறித்த சடலத்தை மீட்டு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் Burlington பகுதியைச் சேர்ந்த 45 வயது ஆண் என்று தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், அவரது பெயர் உள்ளிட்ட மேலதிக விபரங்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

தற்போதைக்கு சந்தேகத்திற்கிடமான தடயங்கள் எவையும் கிடைக்கவில்லை எனவும், மரணத்திற்கான காரணத்தினைக் கண்டறிவதற்காகன உடற்கூற்று பரிசோதனைகள் நடாத்தப்படவுள்ளதாகவும் விசாரணை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் குறித்த இந்தச் சம்பவம் தொடர்பில் ஆதாரங்களைத் திரட்டும் வகையில், அந்த பகுதியில் உள்ள மக்களிடம் தகவல்களைச் சேகரித்து வருவதாகவும், அங்குள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவு ஆதாரங்களை ஆராய்ந்து வருவதாகவும் ஹல்ட்டன் பிராந்திய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *