முக்கிய செய்திகள்

ஒன்ராறியோ மின் உற்பத்தி நிலைய பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை தடை செய்யும் சட்டமூலம் இன்று நிறைவேற்றப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

477

ஒன்ராறியோ மின் உற்பத்தி நிலைய பணியாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடுவது மற்றும் நிலையத்தினை செயற்படாது மூடுவது ஆகிய நடவடிக்கைகளை தடை செய்யும் சட்டமூலம் ஒன்று இன்று ஒன்ராறியோ சட்டசபையில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏறக்குறைய ஒன்ராறியோவின் அரைப் பங்கு பிரதேசத்திற்கு மின்சாரத்தினை
வழங்கும் இந்த நிலையம் செயலிழக்கும் நிலை ஏற்படாது தடுக்கும் இந்த புதிய சட்டம், ஒன்ராறியோ மின்சார ஊழியர் சங்கம் மற்றும் ஒன்ராறியே மின் உற்பத்தி நிலைய நிர்வாகம் ஆகியவற்றுக்கு இடையே நீடிக்கும் பிரச்சினையை முடிவுக்கு
கொண்டுவரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மாநிலத்தில் தேவையற்ற மின் தடை ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாகவும், இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் மின் வினியோகத்தில பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றும் மாநிலத்தின் ஆளும் முற்போக்கு பழமைவாதக் கட்சி தெரிவித்துள்ளது.

எனினும் பழமைவாதக் கட்சியின் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ள எதிர்கட்சி, தொழிலாளர்களுக்க பயத்தினை ஏற்படுத்தும் வகையில் ஆளும்கட்சி நடந்து கொள்வதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

இதேவேளை ஒன்ராறியோ மாநில அரசின் இவ்வாறான முடிவினை இட்டு தாம் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும், பேச்சுக்களை நடாத்தி பேரம் பேசும் வலுவை அடக்குமுறைக்கு உள்ளாக்கும் செயல் இது எனவும் தொழிலாளர்களைப் பிரதிநிதித்தவப்படுத்தும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *