முக்கிய செய்திகள்

ஒன்ராறியோவில் 4505 தொற்றாளர்கள்

273

ஒன்ராறியோவில் நேற்று ஒரே நாளில் 4 ஆயிரத்து 505 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 812 புதிய தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர், அதிகபட்ச தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளது இது மூன்றாவது முறையாகும்.

எனினும், நேற்று முன்தினம் 3 ஆயிரத்து 682 தொற்றாளர்கள் மாத்திரம் அடையாளம் காணப்பட்டனர்.

இதனால், கடந்த சில நாட்களாக ஏழு நாள் சராசரி சற்று குறைந்து வருகிறது.

கடந்த வாரம் நாளாந்த சராசரி 4 ஆயிரத்து 292 ஆக இருந்த இந்த எண்ணிக்கை, தற்போது 4 ஆயிரத்து 132 ஆக குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *