ஒன்றாரியோ மாகாண ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் வகுப்புகளில் இருக்கக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து ஆராய்கிறது

331

ஒன்றாரியோ மாகாண ஆரம்பப் பள்ளிக்கூடங்களில் வகுப்புகளில் இருக்கக் கூடிய மாணவர்களின் எண்ணிக்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து டக் ஃபோர்ட் தலைமையிலான புறொகிறசிவ் கொன்சேவடிவ் அரசு ஆராய்கிறது.
பாலர் வகுப்பொன்றில் தற்போது ஆகக் கூடியது 29 மாணவர்கள் இருக்கலாம். பள்ளிக்கூடச் சபை ஒன்றில் சராசரியாக பாலர் வகுப்பொன்றில் 26 க்கும் குறைவான மாணவர்களே இருக்கலாம். ஏனைய ஆரம்ப வகுப்புக்களில் ஆகக் கூடியது 23 மாணவர்கள் இருக்கலாமென்றாலும், பள்ளிக்கூடச் சபையொன்றின் 90 சதவீதமான வகுப்புக்களில் இந்த எண்ணிக்கை 20 இலும் குறைவாக இருக்கவேண்டும்.
இந்த எண்ணிக்கையைத் தளர்த்துவது குறித்தும், ஆசிரியர்களைப் பணிக்கமர்த்தும் நடைமுறைகளை மாற்றுவது குறித்தும் தொடர்புடைய தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளதாக மாகாண கல்வி அமைச்சர் லீசா தொம்சன் தெரிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் பேரழிவை ஏற்படுத்துமென ஒன்றாரியோ மாகாண ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியர்களின் சம்மேளனத் தலைவர் ளுயஅ ர்யஅஅழனெ எச்சரிக்கை வெளியிட்டுள்ளார்.
அதிகளவான மாணவர்களை வகுப்பறைகளில் அமர்த்தும் போது கற்றல் நடவடிக்கையில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்களை தோற்று விக்கும் என்றும், மாணவர்களை தனிப்பட்ட முறையில் கவனமெடுப்பதிலும் ஆசிரியர்கள் சிரமங்களை எதிர்கொள்வர் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *