முக்கிய செய்திகள்

ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுமேயானால், அது அரசியல் தற்கொலையாக அமையும்

252

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறபோது, ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுமேயானால், அது அரசியல் தற்கொலையாக அமையும் என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான ஜெர்மி ஹண்ட் எச்சரித்துள்ளார்.

ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுகின்ற நடவடிக்கை பொதுத் தேர்தலை கொண்டுவரும். இதனால் தொழிலாளர் கட்சி அதிகாரத்தை பெறலாம் என்று பிபிசியின் ரேடியோ 4இன் இன்றைய நிகழ்ச்சி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்,

வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் ஜெர்மி ஹண்ட், பிரதமர் தெரீசா மேயின் இடத்தை பிடிக்க போட்டியிடும் 10 பேரில் ஒருவராவார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைக்கு போட்டியிடும் இன்னொருவரான எஸ்தர் மைக்வே, அக்டோபர் மாதம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறாமல் இருப்பதே அரசியல் தற்கொலையாக அமையும் என்று கூறியுள்ளார்.

பிரிட்டன் இந்த ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் வழங்கியுள்ள காலக்கெடு இந்த ஆண்டு அக்டோபர் 31ம் தேதியாகும்.

ஜெர்மி ஹண்ட்

ஜூன் 7ம் தேதி கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் தெரீசா மே, கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தவுடன், இந்த கட்சியின் தலைமையை தேர்தெடுக்கும் அதிகாரபூர்வ பணிகள் தொடங்கும்.

ஆனால், இந்த பதவிக்காக போட்டியிடும் வேட்பாளர்களிடையே மோதல்கள் ஏற்கெனவே தொடங்கியுள்ளன.

ஜூலை மாத இறுதியில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்பவர், பிரதமராகவும் பொறுப்பேற்பார்.

பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கு இருக்கின்ற ஒரே தீர்வு, பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்களால் மூன்று முறை நிராகரிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தோடு பிரதமர் தெரீசா மே நடத்திய பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை மாற்ற வேண்டும் என்று பிபிசியின் ரேடியே 4இன் இன்றயை நிகழ்ச்சி ஒன்றில் ஹண்ட் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *