லடாக் எல்லை விவகாரத்தில் ஒரு அங்குல இடத்தை கூட யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
லடாக் கிழக்கு பகுதியின் தற்போதைய நிலைவரம் குறித்து மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ள அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் சீனா ஆக்கிரமித்துள்ளது. சீனாவின் நடவடிக்கைகளை இந்தியா ஒருபோதும் ஏற்கவில்லை. படைகளை குவித்து அச்சுறுத்திய சீனாவை தைரியத்துடன் சமாளித்து இந்திய வீரர்கள் பதிலடி தந்தனர்.
லடாக் எல்லை விவகாரத்தில் ஒரு அங்குல இடத்தை கூட யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டோம். லடாக் எல்லையில் எந்த சோதனை ஏற்பட்டாலும் அதை சந்திக்க தயார்.
எல்லையில் பதற்றத்தை தணிக்க பாங்காங் ஏரி அருகே படைகளை விலக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. லடாக் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதே இந்தியாவின் நோக்கமாகும்.
நாட்டை பாதுகாக்க எத்தகைய சவால்களையும் எதிர்கொள்வோம் என்று இந்திய இராணுவம் நிரூபித்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.