முக்கிய செய்திகள்

ஒரு இனத்திற்கு எதிராக செயற்பட வேண்டாம்: மன்னார் ஆயர் கோரிக்கை

32

ஒரு இனம் மற்றுமொரு இனத்திற்கு எதிராக செயற்படுவது உகந்ததல்ல என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 2 ஆவது வருட நினைவு தினத்தை முன்னிட்டு அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களை ஒவ்வொரு வருடமும் மறக்காது நினைவுகூர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை இந்த குண்டு தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்களையம் அவர்களுக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதையும் இன்னும் சரியாக கண்டு கொள்ளவில்லை என்றும் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை குறிப்பிட்டார். எனவே நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு நீதி அவசியம் என்றும் எந்த மதத்தை சார்ந்தாலும் எந்த மொழியை சார்ந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டியது அவசியம் என்றும் கேட்டுக்கொண்டார்
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *