ஒரேநாளில் 40,611 பேருக்கு தொற்று

28

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. அந்த வகையில் ஒரேநாளில் 40 ஆயிரத்து 611 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 16 இலட்சத்தை கடந்துள்ளது.

அத்துடன் ஒரு கோடியே 11 இலட்சத்து 79 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதேநேரம் 3 இலட்சத்து 47 ஆயிரத்து 71 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *