முக்கிய செய்திகள்

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கக்கூடிய திறமை, அறிவு என்பது வேறு வேறு

289

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கக்கூடிய திறமை, அறிவு என்பது வேறு வேறு. கொஞ்ச விகிதத்தில் மாறி மாறி இருக்கும். அதை உன்னிப்பாக கவனிக்காமல், சிறந்த ஓவியம் வரையக்கூடிய மாணவன் சரியாக பாடவில்லையே என்று நினைப்பதும், நன்றாக பாடக்கூடிய மாணவி நன்றாக ஆடவில்லையே என்று நினைப்பதும் பல்வேறு மன உளைச்சல்களைத்தான் உருவாக்கும்.

ஒரு மயில், சிங்கத்தை போல கர்ஜனை செய்ய முடியவில்லையே என்று நினைக்கவே நினைக்காது. அதே போல், ஒரு சிங்கம் மயிலைப் போல் ஆட முடியவில்லையே என்று நினைக்காது. அவைகள், தங்களின் இயல்புக்கேற்ப முழுமையாக இருக்கின்றன.

ஆனால், சிங்கத்தையும், மயிலையும் கூண்டில் அடைக்கத் தெரிந்த மனிதர்களாகிய நாம்- புலம்பல் என்ற ஒரு பெரிய கூண்டை உருவாக்கி அதில் நாமே மாட்டிக் கொண்டிருக்கிறோம். சரி இந்த கூண்டிலிருந்து எப்படி வெளியேறுவது? கூண்டிலிருந்து வெளியேற வேண்டுமென்றால் முதலில் நாம் கூண்டிற்குள் தான் அடைபட்டுக் கிடக்கிறோம் என்ற விழிப்புணர்வு முக்கியம்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *