கனடிய மொழிச்சட்டத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கு சமஷ்டி அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சீர்திருத்தத்தில் குறிப்பாக பிரெஞ் மொழிப் பயன்பாட்டில் புதிய ஒழுங்கு படுத்தல்களை மேற்கொள்வதற்கு தீர்மானித்திருப்பதாகவும் அத்தகவல்கள் கூறியுள்ளதாக ரேடியோ கனடா தெரிவித்துள்ளது. கியூபெக்கில் பிரெஞ் மொழி தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பிலான அழுத்தங்கள் மேலும் வலுவாகலாம் என்றும் கூறப்படுகின்றது.
எனினும் ஒட்டோவாவின் இந்த சீர்திருத்தம் கியூபெக் பிரெஞ்மொழிச் சாசனத்தினை கட்டுப்படுத்தாது என்றும்கருத்துக்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.