முக்கிய செய்திகள்

கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது

440

கச்சா எண்ணெய் இறக்குமதி விவகாரத்தில் இந்தியாவுக்கு ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்காவின் பேச்சைக் கேட்டு கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈரானுக்குப் பதிலாக சவுதி அரேபியா, ரஷ்யா, ஈராக், அமெரிக்கா என்று வேறு நாடுகளை இந்தியா நாடுமானால், இந்தியாவுக்கென்றே தாங்கள் அளிக்கும் சிறப்புச் சலுகைகள், முன்னுரிமைகளை இழக்க நேரிடும் என்றும் அது தெரிவித்துள்ளது.

அனைத்து இந்திய சிறுபான்மையினர் முன்னணி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்று புதுடெல்லியில் நடைபெற்ற நிலையில், அதில் பங்கேற்ற ஈரான் தூதரக அதிகாரி மசூத் ரெஸ்வானியன் ரஹாகி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அத்துடன் 2012ஆம் ஆண்டில் இருந்து 2015ஆம் ஆண்டு வரையான அமெரிக்க பொருளாதாரத் தடைக் காலக்கட்டத்தில் இந்தியாவின் கச்சா எண்ணெய் விநியோகத்தை ஈரான் பார்த்துக் கொண்டது என்பதையும் அவர் இதன்போது நினைவுபடுத்தியுள்ளார்.

ஈரானிடமிருந்து கச்சா இறக்குமதியை கடுமையாகக் குறைக்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இந்தியாவுக்கு அறிவுறுத்தியுள்ள நிலையில் ஈரான் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *