முக்கிய செய்திகள்

கஜா புயல் பாதிப்பை அரசியல் கண்ணோட்டத்துடன் ஸ்டாலின் பார்க்கக் கூடாது என்று தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்

346

கஜா புயல் பாதிப்பை அரசியல் கண்ணோட்டத்துடன் ஸ்டாலின் பார்க்கக் கூடாது என்று தமிழக பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் தமிழிசை கேட்டுக்கொண்டுள்ளார்.

நேற்றைய நாள் மதுரையில் ஊடகவியலாளர்களிடம் இது குறித்துக் கருத்தக் கூறிய அவர், தமிழகத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதில் மாநில அரசுக்குத் தேவையான உதவிகளை மத்திய அரசு வழங்கி வருகிறது என்று கூறியுள்ளார்.

புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் வாழை, தென்னை மரங்கள் அதிக அளவில் சேதமடைந்துள்ளன என்றும், இந்த மரங்களுக்கு பாரதப் பிரதமரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகள் துரிதமாக நடைபெறுகின்றன என்றும், இது பாராட்டுக்குரியது எனவும் கூறியுள்ள அவர், கஜா புயல் நிவாரணப் பணிகளை திராவிட முன்னேற்றக் கழத்தின் தலைவர் ஸ்டாலின் அரசியல் கண்ணோட்டத்துடன் பார்க்கக் கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *