வடமேற்கு நைஜீரியாவில், உறைவிடப் பாடசாலையில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 317 மாணவிகளை கடத்தல்காரர்கள் விடுவித்துள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன.
மாணவிகள் விடுவிக்கப்பட்டுள்ளதை மாநில ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார் என்று அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மாணவிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு கப்பம் எதுவும் செலுத்தப்படவில்லை என்றும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மீட்கப்பட்ட மாணவிகள், மருத்துவ பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை 317 மாணவிகளையும் ஆயுதம் தாங்கிய குழுவினர் கடத்திச் சென்றிருந்த நிலையில், நைஜீரிய இராணுவத்தினர் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.