கடலூர் சிப்காட் தொழிற்பேட்டையில் பூச்சு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலையில், கொதிகலன் வெடித்து அமோனியா வாயு வெளிவந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்..
பூச்சி மருந்து தயாரிக்கும் இரசாயனத் தொழிற்சாலையில், இன்று காலை சுமார் 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
உடனடியாக தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துடன், பலர் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அங்கு, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 17 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.