முக்கிய செய்திகள்

கடல்அலையில் சிக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

39

திருகோணமலை – வெருகல், முகத்துவாரம் பகுதியில் கடல்அலையில் சிக்கி மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மூதூர்- கட்டைபறிச்சான் – சாலையூர் பகுதியைச் சேர்ந்த, 3 பிள்ளைகளின் தந்தையான 53 வயதுடைய, குழந்தைவடிவேல் ரவீந்திரன் என்பவரே இந்தச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என்று காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கரைவலையை இழுத்துக் கொண்டிருந்தபோது இவர் அலையில் சிக்கி உயிரிழந்தார் என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *