கடல் எல்லைகளைப் பாதுகாப்பதே, சிறிலங்கா அரசாங்கம் தற்போது எதிர்கொண்டுள்ள முக்கியமான சவால் என்று சிறிலங்கா விமானப்படைத் தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரண தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
“கடல்எல்லை பாதுகாப்பே சிறிலங்காவின் தற்கால சவாலாக காணப்படுகிறது. கடல் வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதுடன், சிறிலங்காவுக்குள்ளேயும், போதைபொருள் கொண்டு வரப்படுகிறது.
சர்வதேச போதைப்பொருள் வியாபாரத்தின் முக்கிய மையமாக சிறிலங்கா கடல் எல்லையே காணப்படுகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு, இந்தியாவிடம் இருந்து இரண்டு வானூர்திகளும், அமெரிக்காவிடம் இருந்து இரண்டு வானூர்திகளும் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.
நட்பு ரீதியாக இவற்றை கொடையாக வழங்குவதற்கு இந்த நாடுகள் இணக்கம் தெரிவித்துள்ளன” என்றும் சிறிலங்கா விமானப்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.