கடல் வழியாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த 24 பேர் கைது

54

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கனடாவுக்கு செல்ல முயற்சித்த 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கற்பிட்டி- குரக்கன்ஹேன பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த போதே, இன்று அதிகாலை சிறிலங்கா கடற்படையினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட அனைவரும் மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், இரண்டு குழந்தைகள் மற்றும் பெண் ஒருவரும் அவர்களில் உள்ளடங்கியுள்ளனர் என்றும், சிறிலங்கா கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

இவர்களை அழைத்து செல்வதற்காக பயன்படுத்தப்பட்ட பாரஊர்தி ஒன்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *