கனடாவிற்குள் பிரவேசிக்கும் அனைவரும் மூன்று நாட்கள் தனியார் விடுதியில் தங்கியருக்கும் கட்டாய தனிமைப்படுத்தல் முறையானது எதிர்வரும் 22ஆம் திகதி முதல் அமுலாக்கப்படவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்
இக்காலப்பகுதிக்கான செலவீனத்தினை ஒவ்வொரு தனநபர்களுமே மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளதோடு, சுழற்சி முறையிலான கொரோனா பரிசோதனைக்கும் உட்படுத்தப்படவுள்ளனர்.
இதனைவிடவும் விமானங்கள் கனடாவிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாகவே கொரோனா பரிசோதனை முடிவினை காண்பிக்கும் ஆவணத்தினை கையில் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.