முக்கிய செய்திகள்

கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், கனடாவில் இருந்து அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக எல்லை கடக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது

477

கண்காணிப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள போதிலும், கனடாவில் இருந்து அமெரிக்காவினுள் சட்டவிரோதமாக எல்லை கடக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

மெக்சிக்கோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவினுள் நுளைய விரும்புவோர் முதலில் கனடாவினுள் வானூர்தி மார்க்கமாக வருவதாகவும், பின்னர் அவர்கள் இங்கிருந்து தென்பகுதி எல்லை ஊடாக அமெரிக்காவினுள் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு சட்டவிரோதமாக அமெரிக்காவினுள் சென்று சேர்வோர் சில வேளைகளில் மனிதக் கடத்தல் காரர்களின் துணையுடன் அவ்வாறு சென்று சேர்வதாக கனேடிய மத்திய காவல்துறையினர் மற்றும் அமெரிக்க எல்லைச் சுற்றுக்காவல் படையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் இவ்வாறு சட்டவிரோதமாக எல்லையினைக் கடப்போர் தொகை அதிகரித்துச் செல்வதாகவும், கடந்த யூன் மாதத்தில் மட்டும் நியூயோர்க்குடனான எல்லைப் பகுதி ஊடாக சடடவிரோதமாக நுளைந்த 121 பேரை அமெரிக்க அதிகாரிக்ள கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கனேடிய மத்திய காவல்துறையினர், எல்லைகள் ஊடான செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற போதிலும், இவ்வாறான செயற்பாடுகள் அதிகரித்து செல்வதாக குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் மெக்சிக்கோ நாட்டவர்கள் கனடாவுக்குள் வருவது சட்டவிரோதமானது அல்ல என்ற நிலையில், அவர்கள் இங்கிருந்து வெளியேறிச் செல்வதனை தடுத்து நிறுத்துவதற்கு தம்மால் ஏதும் செய்ய முடியாது எனவும் காவல்துறையினர் விபரித்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *