முக்கிய செய்திகள்

கண்டனம் தெரிவித்தார் பிரதமர்

63

விடுமுறைக்காலத்திற்காக வெளிநாடுகளுக்குச் சென்ற அனைவரினதும் செயற்பாடுகளுக்கு எனது கடுமையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்வதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

2021ஆம் ஆண்டில் முதன்முறையாக ரைடோ மண்டபத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தான், விடுமுறைக்காலத்தினை குடும்பத்தாருடன் கழித்ததாக குறிப்பிட்டுள்ள அவர், இந்தக்காலப்பகுதியில் வெளிநாடுகளுக்குச் செல்வதானது பொருத்தமற்ற நடவடிக்கை என்றும் கூறினார்.

பொதுமக்களுக்கான விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அம்மக்களின் ஆணைபெற்றவர்கள் மீறுவதானது, பொருத்தமற்றதொன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த விடயத்தில் வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்ட அனைவரது செயற்பாடும் கண்டனத்திற்குரியது என்றும் அவர் கூறினார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *