முக்கிய செய்திகள்

கனடாவிடம் பாகிஸ்தான் விசேட கோரிக்கை விடுப்பு

253

பாகிஸ்தானில் இருந்து வரும் எல்லா பயணிகள் வானூர்திகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள தடையை மீளாய்வு செய்யுமாறு கனேடிய அரசாங்கத்திடம் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கனடாவுக்கான பாகிஸ்தான் தூதுவர், இதுதொடர்பாக, கனடாவின் போக்குவரத்து அமைச்சர் ஓமர் அல்காப்ராவுக்கு (Omar Alghabra)  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

பாகிஸ்தானில் புதிதாக கொரோனா தொற்று பரவவில்லை என்று அவர் அந்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை 6 ஆயிரத்துக்கும் குறைவான தொற்றாளர்களே கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஆனால் கனேடிய ஊடகங்களில் 3 இலட்சத்துக்கும் அதிகமான தொற்றாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருப்பாகவும் பாகிஸ்தான் தூதுவர் மேலும் கூறியுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *