கனடாவின் அனுமதி கிடைத்தால் அடுத்த 24 மணிக்குள் தடுப்பூசி; பைசர், பயோஎன்டெக் நிறுவனம்

217

பைசர்( Pfizer) மற்றும் பயோஎன்டெக் (Bioendech) கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கான கனடாவின் அனுமதி கிடைத்ததும் 24 மணிநேரத்திற்குள் அதனை வழங்குவதற்கு தயாராக உள்ளதாக அந்நிறுவனத்தின் வணிக தலைமை அதிகாரியான சீன் மாரெட் (Sean Marrett) தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவை உதாரணமாக எடுத்துக்கொண்டால் அந்நாட்டின் அனுமதிய அதிகாலை ஒரு மணிக்கு கிடைத்தது அடுத்த 24 மணிநேரத்திற்குள் அந்நாட்டிற்காக தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமது நிறுவனத்தின் உயர் மட்டக்குழுவினருடன் கனடிய அரச தரப்பினர் நடத்திய கலந்தரையாடல்களின் பிரகாரம், கனடா அடுத்து வரும் தினங்களில் தடுப்பூசியை அங்கீகரிக்கும் மனநிலையுடன் இருப்பதாக தெரிகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *