முக்கிய செய்திகள்

கனடாவில் இன்று மாபெரும் வானப்பேரணி

96

சிறிலங்காவின் அதியுச்ச அடக்குமுறைத் தடைகளையும் உடைத்தெறிந்து பயணிக்கும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான  போராட்டடத்திற்கு வலுச்சேர்க்கும் மாபெரும் வலுச்சேர்க்கும் வகையில் கனடாவின் ரொரண்டோவில் மாபெரும்  வாகனப்பேரணியொன்று நாளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கனடியத் தமிழர் சமூகம், கனடியத் தமிழ் மாணவர் சமூகம் ஆகியவற்றின் கூட்டு ஏற்பாட்டில்  நண்பகல் 12 மணிக்கு  மாபெரும் கண்டன வாகனப் பேரணி நடைபெறவுள்ளது.

இந்தப் பேரணியானது, மார்க்கம் ஸ்ரில், பிரம்ரன் Shoppers world, மிஸ்ஸிஸசாகா city centre, அஜக்ஸ் நியூ ஸ்பசிலாண்ட் ஆகிய இடங்களில் ஏக நேரத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இதன்போது, தாயகத்தில் தமிழ் மக்களுக்கு தொடர்ச்சியாக இடம் பெறும் இனவழிப்பை நிறுத்தவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும் தாயகத்தில் எம் மக்களால் முன்னெடுக்கப்படும் “பொத்துவில் முதல் பொலிகண்டிவரை” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் இந்த மாபெரும் கலந்து கொண்டு வரலாற்றுக் கடமையை ஆற்ற மக்களே அணிதிரண்டு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்தப் பேரணியின்போது கொரோனா விதிமுறைகளை மதித்து பேணுமாறும் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *