கனடாவில் 20 மற்றும் 30 வயதிற்குட்பட்ட இளைஞர்களிடையே கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகமாக இருப்பதாக மருத்துவர் தெரேசா டாம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய நிலையில் பெரியவர்கள் சமுகத்துடன் தொடர்புகளைப் பேணுவார்களாக இருந்தால் அவர்களிடையே நோய் பரவும் நிலைமை அதிகமாகவுள்ளது.
எனினும், ஆரம்ப காலத்தில் இருந்த நிலைமைகளுடன் ஒப்பிடும்போது பெரியவர்களைத் தாண்டி ஏனைய வயதினர்களையும் கொரோனா தொற்றியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமையானது மூன்றாவது அலையில் அதிகமாக இருக்கின்றமை பாரதூரமானது என்று அவர் மேலும் கூறினார்