முக்கிய செய்திகள்

கனடாவில் கடுமையான குளிர்!

623

கனடாவில் கடுமையான பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசிவருகின்ற நிலையில் அங்கு வெப்ப நிலை -21°C ஆக பதிவாகியுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கனடாவில் கடந்த சில நாட்களாகவே கடும் குளிருடனான காலநிலை நிலவி வருகின்றது.

இந்தநிலையில் இன்று(திங்கட்கிழமை) கனடாவில் வெப்ப நிலை -21°C ஆக பதிவாகியுள்ளது என கனேடிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் பனிக்கட்டிகள் குவிந்துள்ளது. இதனால் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கனடாவின் சில பகுதிகளில் 26 km/h வேகத்தில் கடும் பனிப்புயல் வீசும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சில முக்கிய விமான நிலையங்களில் விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *