கனடாவில் கைத்துப்பாக்கிகள் உள்ளிடட அயுதங்களை தடை செய்வது குறித்து பரிசீலிக்கப்படுகிறது

515

கனடாவில் கைத்துப்பாக்கிகள் மற்றும் தாக்குதல் ஆயுதங்களைத் தடை செய்ய வேண்டுமா என்பது குறித்து ஆய்வு செய்வதற்கான நடவடிக்கையினை மத்திய எல்லைப் பாதுகாப்பு துறை அமைச்சர் பில் பிளையர் தொடங்கியுள்ளார்.

இது குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ள அவர், இந்த தடை தொடர்பிலான ஆய்வினையும் ஆலோசனைகளையும் நடாத்துவதற்காக பல்வேறு மக்கள் சந்திப்புகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.

சமூக பிரமுகர்கள் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் இது குறித்து கலந்துரையாடப்படும் எனவும், வட்டமேசை மாநாடுகள் ஒழுங்கு செய்யப்படும் என்றும், எதிர்வரும் நவம்பர் 10ஆம் நாள் வரையில் இணையம் மூலமாகவும் தமது கருத்துகளை மக்கள் பகிர்ந்து கொள்ளலாம் எனவும் அவர் விபரம் வெளியிட்டுள்ளார்.

கனடாவில் வன்முறைகளைக் கட்டுப்படுத்தும் கடப்பாட்டினைக் கொண்டுள்ள மத்திய அரசாங்கம், இந்த தடை குறித்து பல்வேறு தரப்பினரிடம் இருந்தும், பல்வேறுபட்ட கருத்துக்களை செவிமடுப்பதற்கு தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *