முக்கிய செய்திகள்

Warning: Invalid argument supplied for foreach() in /home/vmctr24/public_html/wp-content/themes/nanomag/news-ticker.php on line 15

கனடாவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கைஒருமில்லியனைக் கடந்தது

257

கனடாவில் இனங்காணப்பட்டுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று ஒரு மில்லியனை தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த இரண்டு நாட்களில் கண்டறியப்பட்ட 2 ஆயிரத்து 90  தொற்றாளர்கள் பற்றிய விபரம் அறிவிக்கப்பட்டதை அடுத்து கனடாவில் இதுவரை இனங்காணப்பட்டுள்ள  தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 இலட்சத்து ஆயிரத்து 650 ஆக அதிகரித்துள்ளது.

மார்ச் 13ஆம் நாள் தொற்றாளர்களின் எண்ணிக்கை, 9 இலட்சத்தைக் கடந்திருந்த நிலையில், கடந்த மூன்று வாரங்களில் பத்து இலட்சத்தை கடந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைக்காலத்தில் கனடாவில் மூன்று தொடக்கம் நான்கு வாரங்களில் ஒரு இலட்சம் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *