முக்கிய செய்திகள்

கனடாவில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகனப் பேரணி

48

சர்வதேச மகளிர் தினமான இன்று கனடாவில் தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வாகனப் பேரணி நடத்தப்படவுள்ளது.

கனடா தமிழ் மகளிர் அமைப்பினால் நடாத்தப்படும் வாகனப்பேரணி, MARKHAM & STEELES மற்றும் பிரம்டன் shoppers world ஆகிய இரு இடங்களில் இருந்தும் முற்பகல் 11 மணிக்கு ஆரம்பிக்கவுள்ளதோடு குயின்ஸ் பாக்கில் நிறைவுக்கு வரவுள்ளது.

இதன்போது தாயகத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளுக்கு சர்வதேச குற்றவியல் நீதி விசாரணை வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படவுள்ளது.

தமிழ்த் தேச அங்கீகாரம், காணி சுவீகரிப்பு நிறுத்தப்பட வேண்டும், வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எமது நிலம் எமது உரிமை உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்திய வலியுத்தல்களும் இந்தப் பேரணியின் போது முன்வைக்கப்படவுள்ளது.

இந்தப் பேரணியானது, கனடிய கொரோன விதிமுறைகளுக்கு அமைவாக முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *