முக்கிய செய்திகள்

கனடாவில் நடைபெறவுள்ள வர்த்தக மாநாட்டுக்கு அமெரிக்கா அழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது

418

கனடாவில் நடைபெறவுள்ள வர்த்தக மாநாட்டுக்கு அமெரிக்கா அழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

WTO எனப்படும் உலக வர்த்தக நிறுவனத்தை பாதுகாப்போம் என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் 13 நாடுகள் கலந்துகொள்ளவுள்ள நிலையில், அமெரிக்கா அதில் இடம்பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கனேடிய வர்த்தக அமைச்சர் ஜிம் கார்(im Carr), இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டுள்ள ஏனைய 13 நாடுகளைப் போன்று, அமெரிக்கா இதுகுறித்த தனது அக்கறையை வெளிப்படுத்தாத நிலையில், அதனை அழைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதியில் ஒட்டாவாவில் இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில், இந்த விடயத்தில் ஒரே மனோநிலையில் உள்ள 13 நாடுகளின் மூத்த அமைச்சர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உலக வர்த்தக நிறுவனத்தினை மீளமைப்பது குறித்து ஆராயப்படவுள்ள இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறும், அந்த அமைப்பின் பலாபலன்கள் குறித்தும் அமெரிக்க அரசாங்கத்திற்கு ஏனைய உறுப்புநாடுகள் வலியுறுத்திய போதிலும், தற்பேரது அமெரிக்காவின் பங்களிப்பு இன்றி இந்த மாநாட்டை நடாத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விபரித்துள்ளார்.

அந்த வகையில் ஒரே மனப்போக்குடைய நாடுகளுடன் முதலில் இந்த பேச்சுக்களை ஆரம்பிப்பது என்று தீர்மானிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையிலேயே அந்தந்த நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *