கனடாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தொடர் கூட்டு படுகொலையாளி புரூஸ் மெக்காத்தருக்கு எதிரான வழக்கு விசாரணைகள்

340

கனடாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தொடர் கூட்டு படுகொலையாளி புரூஸ் மெக்காத்தருக்கு எதிரான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் ரொறன்ரோ நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
இன்றைய வழக்கு விசாரணகளில் முக்கியமான ஒர் விடயத்தை எதிர்பார்க்கலாம் என பிரதான ஊடகமொன்று எதிர்வு கூறியுள்ளது.
தொடர் கொலைகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 67 வயதான புரூஸ் மெக்காத்தர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
ஸ்கந்தராஜ் நவரட்ணம், கிருஷ்ணகுமார் கனகரட்ணம் உட்பட எட்டுப் பேரை அவர் கொலை செய்தாரெனக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆந் நாள் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் கொல்லப்பட்டவர்களின் உடல்களின் சிதைவுகள் பாரிய பூச்சாடி ஒன்றினுள் இருந்தும், வீடொன்றின் பின் புறம் இருந்தும் மீட்கப்பட்டன.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *