ஐ.நா. பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடப் போவதாக கனடாவில் வசிக்கும், 34 வயதுடைய அரேரா அகன் ஷா என்ற இந்திய வம்சாவளிப் பெண் அறிவித்துள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலர் அன்ரனியோ குடெரெசின் பதவிக் காலம், எதிர்வரும் டிசெம்பருடன் முடிவடையவுள்ள நிலையிலேயே, ஐ.நா. அபிவிருத்தித் திட்ட கணக்கு தணிக்கை அமைப்பாளராக உள்ள அரோரா அகன் ஷா (Arora Akanksha) இந்தப் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், சமூக வலைதளத்தில், காணொளிப் பிரசாரத்தையும் ஆரம்பித்துள்ளார்.
தன்னைப் போன்ற பெண்கள், அதிகாரமிக்க தலைமை பொறுப்பிற்கு வருவதில்லை. தங்களுக்கான காலம் வரும் வரை காத்திருக்கின்றனர்.
அரசியல்வாதிகளுக்கு காவடி தூக்குவதை நிறுத்தி விட்டு, மக்களுக்கு சேவையாற்றும் நேரம், ஐ.நா.வுக்கு வந்து விட்டது. அதை முன்னின்று செய்யவே, பொதுச் செயலர் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்றும் அந்த காணொளியில் அரோரா அகன் ஷா (Arora Akanksha) குறிப்பிட்டுள்ளார்.