முக்கிய செய்திகள்

கனடாவில் வீடுகளை கொள்வனவு செய்வதனை விடவும் வாடகைக்கு பெற்றுக்கொள்வதில் அதிகளவானோர் நாட்டம்!

383

கனடாவில் வீடுகளை கொள்வனவு செய்வதனை விடவும் வாடகைக்கு பெற்றுக்கொள்வதில் அதிகளவானோர் நாட்டம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய ஆண்டுகளில் கனடாவில் வீடுகளின் விலைகள் உயர்வடைந்துச் செல்லும் போக்கினையே பதிவு செய்து வருவதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
கனடாவின் தேசிய வங்கியால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டு;ள்ளது.
மிக நீண்ட காலத்தின் பின்னர் சொந்தமாக வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கு செலவிடுவதனை விடவும் வாடகைக்காக குறைந்தளவு தொகையை செலவிட நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் பெரு நகரங்களான ரொறன்டோ, மொன்ட்ரியயல் மற்றும் வான்கூவர் ஆகியனவற்றில் சொந்தமாக கொள்வனவு செய்வதனை விடவும் வாடகைக்கு வீடுகளை பெற்றுக்கொள்வது லாபகரமானது என்று தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *