கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த மே மாதம் கனேடிய தொழிற்ச் சந்தையில் புதிதாக 27700 தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
புதிய தொழில்வாய்ப்புக்களின் மூலம் கனடாவின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் வேலையற்றோர் எண்ணிக்கை 5.7 வீதமாக காணப்பட்டதாகவும் அது மே மாதத்தில் 5.4 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒப்பீட்டளவில் கடந்த 1976ம் ஆண்டின் பின்னர் வேலையற்றோர் எண்ணிக்கையில் இந்த ஆண்டில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.


கனடாவில் வேலையற்றோர் எண்ணிக்கை குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
Jun 08, 2019, 02:34 am
403
Previous Postசுற்றுலாப் பயணிகளுக்காக சர்வதேச விண்வெளி மையம் ஒன்றை நாசா .
Next Postபெண்கள் உலகக்கோப்பை கால்பந்து