முக்கிய செய்திகள்

கனடாவுக்குள் குடியேற முயற்சிப்போர் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய நிலை !

367

பிரதமர் ஜஸ்ரீன் ரூடோவின் ஏதிலிகள் தொடர்பிலான கொள்கையால் நேர் வழியில் கனடாவுக்குள் குடியேற முயற்சிப்போர் நீண்டகாலம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கொன்சவேடிவ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அன்றூ ஷியர்  விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
கனேடிய குடிரவு குடியகழ்வு முறைமையின் நம்பகத்தன்மையை சிதைக்கும் வகையிலான கருத்துக்களை பிரதமர் ரூடோ முன்வைத்துள்ளதாக ஷியர் தெரிவித்துள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக பிரதமர் ரூடோ வெளியிட்ட டுவிட்டர் பதிவு ஒன்று தொடர்பில் ஷியர் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
உயிர் ஆபத்துக்களில் இருந்து தப்பிக்க முனைவோர், பயங்கரவாதம் மற்றும் போர் காரணமாக பாதிக்கப்பட்டோர் அனைவரையும் வரவேற்பதாகவும், பல்லின கலாச்சாரமே கனடியர்களின் பலம் எனவும் பிரதமர் பதிவிட்டிருந்தார்.
ஏழு அரேபிய நாடுகளைச் சேர்ந்த பிரசைகள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதனை தடை செய்வதாக அறிவித்து அந்நாட்டு அரச தலைவர் டொனால்ட் ட்றாம்ப் அறிவித்ததனைத் தொடர்ந்தே, கனேடிய பிரதமர் இந்த டுவிட்டர் பதவினை இட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் உலக நாடுகள் இடையே தனக்கான பெருமிதத்தை தேடிக்கொள்ள மேற்கொண்ட இந்த நடவடிக்கையால் கனடிய குடிவரவுத் திட்டத்தின் ஒருமைப்பாடு பாதிக்கப்பட்டுள்ளதாக விமர்சனம் வெளியிட்ட ஷியர், நேர்வழியில் குடியேற முயற்சிப்பவர்கள் நீண்டகாலம் காத்திருக்க நேரிடுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *