முக்கிய செய்திகள்

கனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை

407

அமெரிக்க கனேடிய எல்லைப் பகுதியின் ஊடாக கனடாவுக்குள் பிரவேசிக்க முயற்சிக்கும் ஏதிலிக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு விசேட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஏதிலிக் கோரிக்கையாளர்களை பிரவேசிப்பதனை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளுக்காக 1.2 பில்லியன் டொலர் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஏதிலிக் கோரிக்கையாளர் விவகாரம் அரசியல் வட்டாரத்தின் முக்கிய பேசு பொருட்களில் ஒன்றாக காணப்படுகின்றது.
கடந்த ஆண்டில் நைஜிரியா, எல்சல்வடோர், ஹொண்டுராஸ் உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்த 57000 ஏதிலிக் கோரிக்கையாளர்கள் அமெரிக்காவுடனான எல்லை வழியாக கனடாவுக்குள் பிரவேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *