முக்கிய செய்திகள்

கனடாவைச் சேர்ந்த தாயும் மகளும் கலிபோர்னியாவில் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

476

கனடாவின் கியூபெக் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கலிபோர்னியாவின் வடபகுதியில் காணாமல் போயுள்ள நிலையில், அதிகாரிகள் அவர்களைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆனட்ரே றோட்றிக்(Audrey Rodrigue) எனப்படும் 29 வயதுப் பெண்ணும், எமிலி றோட்றிக் எனப்படும் பத்துவயது சிறுமியுமே கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து காணாமல் போயுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த அந்தப் பகுதிக்கு விடுமுறைக்கால முகாம் அமைத்து பொழுது போக்குவதற்காக சென்றிருந்த அவர்களிடம் இருந்து கனடாவில் உள்ள அவரது ஆண் துணைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையில் இறுதியாக குறுந்தகவல் கிடைத்துள்ளதாகவும், அதன்பின்னர் எந்தவித தகவலும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

விசாரணைகளில் இருந்து, அவர்கள் சான் ஃபிரான்சிஸ்கோவில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தெற்கே உள்ள விருந்தினர் விடுதி ஒன்றிற்கு சென்றதாகவும், ஆனால் அவர்கள் அங்கு சென்று சேரவில்லை எனவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள அதிகாரிகளை கனடாவில் இருந்து கடந்த திங்கட்கிழமை அழைத்த அவரது ஆண் துணை, விடயத்தை தெரியப்படுத்தியதை அடுத்து அதிகாரிகள் தேடுதல்களை முன்னெடுத்துள்ளனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *