முக்கிய செய்திகள்

கனடா பெண் ஜமைக்காவில் உயிரிழந்த சம்பவத்தில் ஆண் கைது

26

கனடாவை சேர்ந்த 43 வயதான பெண் ஜமைக்காவில் உயிரிழந்த சம்பவத்தில் ஆண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Markham நகரை சேர்ந்தவர் லடோயா அல்சிண்டர் (Latoya Alcindor) 43வயதான இவர் கடந்த டிசம்பர் மாதம் ஜமைக்காவுக்கு தொழில் சம்மந்தமாக சென்றார். இதோடு ஏற்கனவே தான் அங்கு சந்தித்த ஆண் நண்பர் ஒருவரையும் சந்திக்கவும் சென்றிருக்கிறார்.

அங்குள்ள விருந்தினர் மாளிகையில் அந்த நபருடன் அவர் தங்கியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த வாரத்தில் Latoya அங்கு கத்திகுத்து காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பில் ஆண் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் Latoyaவுடன் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த நபரா என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *