முக்கிய செய்திகள்

கனடிய அரசாங்கம் மன்னிப்பு கோரவுள்ளது

35

முதலாம் உலகப் போரின் முன்னரும் பின்னரும், இரண்டாம் இலக்க கட்டுமான படைப்பிரிவின் உறுப்பினர்கள் நடத்தப்பட்ட முறை குறித்துகனடிய அரசாங்கம் மன்னிப்பு கோரவுள்ளது.

1914ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம், ஜேர்மனிக்கு எதிராக பிரித்தானியா போர்ப் பிரகடனம் செய்த நிலையில், முடியாட்சியின் கீழ் இருந்த கனடாவும் அந்தப் போரில் பங்கேற்றது.

இதன்போது, கறுப்பின கனேடியர்களும் போரில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருந்த போதும், அவர்களில் சிலரால் மட்டுமே, இணைந்து கொள்ள முடிந்தது.

கறுப்பின கனேடியர்கள் பாரபட்சமாக நடத்தப்பட்டதால், பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட அதேவேளை, நோவா ஸ்கொட்டியா மாகாணத்தில் உருவாக்கப்பட்ட 2 ஆவது கட்டுமானப் படைப்பிரிவில், வேறு பல இடங்களைச் சேர்ந்தவர்களே சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

இந்த நிலையிலேயே இதுகுறித்து கனேடிய அரசாங்கம் மன்னிப்புக் கோரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *